Home NEWS 3 அடி உயர பட்டதாரிக்கு எம்எல்ஏ வீடியோவால் ரெண்டே மணி நேரத்தில் வேலை…!!!

3 அடி உயர பட்டதாரிக்கு எம்எல்ஏ வீடியோவால் ரெண்டே மணி நேரத்தில் வேலை…!!!

ankesh

மத்தியபிரதேசம் குவாலியர் நகரை சேர்ந்தவர் அங்கேஷ் கோஸ்தி. வயது 28 ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ஒரு தொழிற்சாலையில் சாதாரண ஊழியர், தாயார் டைலர். எம்பிஏ பட்டதாரியான அங்கேஷ் மொழி மற்றும் தொழில் நுட்ப திறமைகள் நிறைந்தவர். இவரது உயரம் 3 அடி 7 இன்ச்.

இதை காரணமாக்கி யாரும் வேலை கொடுக்கவில்லை. சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் பதக்கை சந்தித்த அங்கேஷ், தனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அவர் அங்கேஷின் திறமைகள், தன்னம்பிக்கை, குடும்ப நிலவரம் மற்றும் வேலை கோரிக்கை கொண்ட ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ சில நிமிடங்களில் வைரலானது இரண்டு மணி நேரத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து அங்கேஷுக்கு வேலைவாய்ப்பு அழைப்பு வந்தது. அதில் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து பணியில் சேர்ந்தார்.

அங்கேஷ் கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே, முதியவர்களான அவர்களின் உழைப்பில் தான் சாப்பிட வேண்டியிருக்கிறது என்ற வேதனை என்னை ஒவ்வொரு நொடியும் வாட்டி வதைத்தது. அந்த வேதனையை போக்கிய எம்எல்ஏ பிரவீன் சாருக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுஇருப்பேன் என நெகிழ்ந்தார் அங்கேஷ்.

Exit mobile version