Home CINEMA NEWS கணவரின் மரணம் குறித்து தவறான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் மீனா பதிவிட்ட உருக்கமான பதிவு…!!!

கணவரின் மரணம் குறித்து தவறான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் மீனா பதிவிட்ட உருக்கமான பதிவு…!!!

meena emotional post

பிரபல நடிகை மீனா சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர். பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார் மீனாவிற்கு நைனிகா என்ற 11 வயது மகள் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார் இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சிக்குள் ஆக்கியது. மீனா கணவர் வித்யாசாகர் அவர்களுடைய வயது 48 இந்த வயதிலேயே மனிதர் உலகத்தை விட்டு சென்று விட்டாரே என்று அனைவரும் வருத்தப்பட்டு வந்த நேரத்தில் பல மீடியாக்களில் மீனா கணவரின் மரணத்தைப் பற்றி விவாதங்கள் நடத்தினார்கள்.

சிலர் மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து வந்தார்கள். சில மருத்துவர்கள் மீனா கணவரை காப்பாற்றியிருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆளாளுக்கு ஒவ்வொரு தகவல்களை இணையத்தில் பதிவிட அதனை பார்த்த மீனா இன்று வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார் அதில் எனது அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன்.

தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு உதவிய மற்றும் துணை நின்ற அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், எங்கள் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மீனா உருக்கமான பதிவை வெளியிட்டு உள்ளார்.

Exit mobile version