Home NEWS மே 10ம் தேதி தொடங்கும் ஊரடங்கில் எது இயங்கும் எது இயங்காது லிஸ்ட் ...

மே 10ம் தேதி தொடங்கும் ஊரடங்கில் எது இயங்கும் எது இயங்காது லிஸ்ட் இதோ..!!! மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் – தமிழக முதல்வர் ஸ்டாலின்.

tn lock down announced by tamilnadu cm stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. மே 8ஆம் தேதி இன்றும் மே 9-ஆம் தேதி நாளையும் வழக்கம் போல் கடைகள் இயங்க அனுமதி கொடுத்துள்ள தமிழக அரசு வருகின்ற திங்கட்கிழமை மே 10 ஆம் தேதியிலிருந்து மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும் மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறியிருக்கிறது அரசு தரப்பு.

ஊரடங்கில் என்னென்னவெல்லாம் இயங்கும் என்பதை லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு அதில்

தமிழகத்தில் பால் விநியோகிப்பதில் எந்த ஒரு தடையும் இல்லை.

பத்திரிகை வினியோகம் செய்வதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.

மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் இயங்கு எந்த தடையும் இல்லை.

மளிகை பலசரக்குகள் காய்கறி இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏசி இல்லாமல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி.

கொரியர் சர்வீஸ் இயங்கு உத்தரவு.

உணவகங்கள் காலை 6 மணி முதல் பத்து மணி வரையிலும் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகம் எந்த ஒரு தடையில்லாமல் தொடர்ந்து செயல்பட அனுமதி.

சாலையோரத்தில் இயங்கும் உணவகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி.

பூக்கடைகள் இயங்க நண்பகல் 12மணி வரை இயங்க அனுமதி.

அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் எந்த ஒரு தடையின்றி இயங்க அனுமதி.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து செயல்பட அனுமதி.

ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி.

வங்கிகள் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

திருமணத்தில் 50 பேருக்கு மிகாமலும் இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம்.

மாநிலத்தில் அனைத்து பகுதிகளும் சரக்குப் போக்குவரத்துக்கு எந்த ஒரு தடையும் இல்லை.

பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படலாம்.

தனியார் அலுவலங்கள் இயங்க தடை.

வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் இயங்க தடை.

மாவட்டங்களிடையே பேருந்து போக்குவரத்துக்கு தடை.

டாஸ்மாக் கடைகள் இயங்க தடை.

திரையரங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க தடை.

மத்திய அரசு அறிவித்த விமானங்களை தவிர பிற விமானங்கள் மற்ற நாடுகளில் இருந்து வர தடை.

வழிபாட்டு தளங்களில் மக்கள் வழிபாடு செய்ய தடை.

சுற்றுலாத்தளங்களுக்கு தடை.

இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அப்போது தன் கொரோனா நோயில் இருந்து நாம் மீள முடியும் மக்களாகிய உங்களை மன்றாடி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Exit mobile version