Home CINEMA NEWS லோகேஷ் கனகராஜுக்கு கல்யாணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

லோகேஷ் கனகராஜுக்கு கல்யாணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மாபெரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய முதல் படம் மாநகரம். மாநகரம் படத்தை தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து விஜய், கமல், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை தந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய கைதி ,மாஸ்டர், விக்ரம் போன்ற அனைத்து படங்களும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இதற்கான படப்பிடிப்பு வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை பல ரசிகர்கள் திருமணம் ஆகவில்லை என்றுதான் நினைத்திருப்பார்கள். சினிமாவிற்கு வரும் முன்னரே திருமணமாகியுள்ளது.

சினிமா ஆசை நிறைவேற செய்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் முழு நேர வேலையாக பார்த்து வந்தவருக்கு அவரது மனைவி தான் பெரும் சப்போர்ட்டாக இருந்து உள்ளாராம்.

தன் குழந்தை ஏழு மாதமாக இருக்கும்போது என் மனைவி வங்கி ஒன்றில் வேலை பார்த்தார். என் முதல் படம் வெற்றியடைந்து இரண்டாவது படத்தில் நான் கையெழுத்து இடும்பொழுது மனைவியை வேலையை விட சொன்னேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த புரிதலில் தான் காதல் அடங்கியுள்ளது என்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர் .

Exit mobile version