Home NEWS தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற...

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா..!!!

mansoor ali khan thondamuthur

மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் வில்லனாக நடித்த இவர். சமூக பிரச்சினைகளுக்கு அரசுக்கு எதிராக குரல் கொடுத்து சிறைக்கு சென்று வந்தார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் அக்கட்சியிலிருந்து வெளிவந்து தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை தொடங்கினார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மன்சூர் அலிகான். தேர்தலுக்குப் முன் அந்தப் பகுதி மக்களை சந்தித்து உங்கள் குறைகளை சொல்லுங்கள் நான் தீர்த்து வைக்கிறேன் என்று பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு அந்த தொகுதி மக்களிடம் குறைகள் கேட்டு வந்தார்.

மக்களோ மன்சூர் அலிகானிடம் நிற்கச்சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்கள் தொகுதியில் எந்த ஒரு குறையும் இல்லை நன்றாக தான் இருக்கிறது என்று கூறி அவரை வெறுப்படைய செய்தார்கள்.

நொந்துபோன மன்சூர் சாலையோரத்தில் தரையில் அமர்ந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டார். அதன்பின் நான் தேர்தலில் நிற்கப் போவதில்லை எங்க போனாலும் பாய் எவ்ளோ காசு வாங்குனீங்க நீங்க ஓட்ட பிரிக்கதான தேர்தலில் நிக்கிறீங்க என்று கேட்டு வருகிறார்கள் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

நான் என்னுடைய சொந்த ஊரில் நிற்காமல் வேறு எங்கும் நிற்க முடியும் என்று கேட்டவர். சுயேட்சையாக தொண்டாமுத்தூர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வேலுமணி அதிமுக அவர்கள் அதிக வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். மன்சூர் அலிகான் அவர்கள் 428 ஓட்டுகள் பெற்று மோசமான தோல்வியை சந்தித்தார். அந்த தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்கு 1635 என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version