Home NEWS மன்னார்குடி : துளசேந்திரபுரம் பகுதியில் கமலா ஹாரிஸுக்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது..! இதற்கு முக்கிய காரணம்...

மன்னார்குடி : துளசேந்திரபுரம் பகுதியில் கமலா ஹாரிஸுக்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது..! இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா..?

கமலா ஹாரிஸின் தாத்தா மன்னார் குடியை சேர்ந்தவர். பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன்.

கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக ஆங்கிலேயர் காலத்திலேயே பணியாற்றி இருக்கிறார். இவர் அமெரிக்காவில் 1930 க்குப் பின் சென்று அங்கு குடியேறினார். இதன் மூலமாகத்தான் கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் குடியேறினார்.

தாத்தா கோபாலின் இரண்டாவது பேத்தி கமலா ஹாரிஸ் ஆவார். இதற்கு முன்னர் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடதோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஜோ பைடன் தனது சொந்த விருப்பத்தின் பெயரில் தேர்வு செய்துள்ளார். இவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தால் பல தரப்பட்ட மக்கள் இவருக்கு வாக்களிப்பார்கள் என்று ஜோ பைடன் நம்புகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது.

துணை அதிபர் பதவிக்கு நிற்கும் கமலா தேவி ஹாரிஸுக்கு ஆதரவாக மன்னார்குடி அருகே இருக்கும் துளசேந்திரபுரம் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது

Exit mobile version