Home NEWS 1.30 லட்சம் ரூபாய் வளர்ப்பு கிளியை காணவில்லை போலீசில் புகார் கொடுத்த உரிமையாளர்…!!! 24 மணி...

1.30 லட்சம் ரூபாய் வளர்ப்பு கிளியை காணவில்லை போலீசில் புகார் கொடுத்த உரிமையாளர்…!!! 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..!!!

man missed 1.30 lakhs Australian parrot

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் திடீரென காணாமல் போனால் உரிமையாளர்கள் மிகவும் மனம் உடைந்து விடுவார்கள். அந்த வகையில் ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் காபி கடை நடத்தி வரும் நரேந்திர சாரி என்பவர் தனது வீட்டில் செல்லமாக காலா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா ரக கிளியை வளர்த்து வந்தார்.

ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள அந்த கிளி கடந்த மாதம் 22-ந் தேதி காணாமல் போனது. இதனால் கிளியின் உரிமையாளர் பல இடங்களில் தேடி பார்த்தும், அது கிடைக்காத நிலையில் போலீசில் புகார் செய்தார்.

காவல்நிலையத்திற்கு சென்று தனது கிளியை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை ஒன்றை வைத்தார்அதில் கிளியின் புகைப்படம் மற்றும் அதனை ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்ததற்கான சான்றிதழ்களையும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களிடம் கிளியின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடையின் மேலாளர் கிளி இருக்கும். இடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், உடனடியாக அங்கு சென்ற போலீசார் அந்த கிளியை மீட்டனர். அந்த கிளி ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 24 மணி நேரத்தில் அந்த கிளியை அதன் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்,

கிளி கிடைத்த சந்தோசத்தில் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார் அந்த கிளியின் உரிமையாளர்.

Exit mobile version