Home CINEMA NEWS விஜய் சிறந்த நடிகர் இல்லை என விமர்சித்த மலையாள நடிகர்…!!! கடுப்பில் விஜய் ரசிகர்கள்.

விஜய் சிறந்த நடிகர் இல்லை என விமர்சித்த மலையாள நடிகர்…!!! கடுப்பில் விஜய் ரசிகர்கள்.

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் படம் என்றாலே திரையரங்குகள் விழாக்கோலம் போல் காட்சியளிக்கும் அந்த அளவுக்கு விஜயை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். நடிகர் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும்பாலான ரசிகர் கூட்டம் உள்ளது.

நடிகர் விஜய்யை மலையாள பிரபல நடிகர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்து இருப்பது தளபதி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிரபல மலையாள தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றின் மூலம் பிரபல சீரியல் நடிகரான சித்திக் விஜயை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அவர் சூப்பர்ஸ்டார் நடிகர்களாக மம்முட்டி, மோகன்லால் இங்குதான் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் பெரிய நடிகர் இளையதளபதி என சொல்லப்படும் நடிகர் விஜய் உண்மையாகவே சிறந்த நடிகர் இல்லை. வேணுமானால் உலகநாயகன் கமலஹாசன் சிறந்த நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாமே தவிர மற்றவர்கள் எவரும் குறிப்பாக விஜயை சிறந்த நடிகர் என சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என சித்திக் விமர்சித்துள்ளார்.

இந்த பேட்டிக்கு பிறகு மலையாள நடிகரான ஹரிஷ் பெராடி தளபதி விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். இளைய தலைமுறையில் முன்மாதிரியாக விளங்கும் விஜய், சூப்பர் ஸ்டார் தான். நடிகர் விஜய் சிறந்த நடிகர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஹரிஷ் பெராடி கூறியது ரசிகர்களிடையே சற்று சாந்தப்படுத்தி உள்ளது.

இவ்வாறு நடிகர் விஜய்யை மலையாள சினிமா உலகம் பல்வேறு விதமான கருத்துக்களை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வில்லனாக நடித்த தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஹரிஷ் பெராடி குறிப்பிடத்தக்கது.

Exit mobile version