Home NEWS வேளச்சேரியில் போட்டியிட இருக்கும் மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் சந்தோஷ் பாபு ஐஏஸ்...

வேளச்சேரியில் போட்டியிட இருக்கும் மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் சந்தோஷ் பாபு ஐஏஸ் அவர்களுக்கு கொரோனா..!!!

MNM sanotshbabu ias corona positive

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து ஒன்றாக செயல்பட்டு வருபவர் தான் சந்தோஷ் பாபு ஐஏஎஸ். தமிழகத்தில் பணியாற்றிய நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐஏஎஸ் பயிற்சி கொடுக்கும் அகாடமியில் முழுநேர ஆசிரியராக இணைந்தார். இன்னும் எட்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு இருந்தும் அவர் திடீரென்று விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.

அதன்பின் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அவர் மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 25 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தவுடன் மக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் பார்வை அவர் மீது இருந்தது.

தற்பொழுது வேளச்சேரி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிட இருக்கும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

மக்களிடம் நேரில் சந்தித்து வாக்குக் கேட்க முடியாமல் போச்சு என்று வருத்தப்பட்ட அவர் கடிதம் மூலமாக மக்களிடம் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தமிழகத்தை வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் துணைகொண்டு ஏழ்மையில்லா முழுமையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய கனவு.

அதை கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ் நாட்டின் மிகத் திறமையான இளைஞர்களின் அறிவாற்றல் தான் என்றால் மிகையாகாது இலவசங்களால் ஏமாற்றி உங்களில் பலரையும் வறுமையில் இருந்து மீள முடியாமல் ஊழல் மலிந்த அரசியலில் இருந்து உங்களை நிச்சயம் விடுவிக்க முடியும்.

பூம்புகாரை சீரமைத்த என்னால் வேளச்சேரியையும் சீரமைக்க முடியும் என்று நம்பி டாக்டர் திரு கமல்ஹாசன் என்னை இங்கு களம் இறக்கியுள்ளார்.

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து இந்த அறிய வாய்ப்பை எனக்கு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் நன்றி என்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version