Home NEWS திமுகவில் இணைந்தார் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்..!!! லேட்டா வந்தாலும்...

திமுகவில் இணைந்தார் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்..!!! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்காரு முதல்வர் புகழாரம்.

mahendran joins in dmk infront of cm stalin

டாக்டர் மகேந்திரன் மக்கள் நீதி மய்யத்தின் தூணாக செயல்பட்டு வந்தவர். நடிகர் கமலஹாசன் மீது அலாதி பிரியம் கொண்ட இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

தேர்தல் நேரத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கமலஹாசன் அவர்கள் மாற வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜனநாயகம் இல்லை. கமலஹாசன் அவர்கள் மாறுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் மாறவே இல்லை என்று கூறி அந்த கட்சியை விட்டு வெளியேறினார் அவரை தொடர்ந்து அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பத்மா பிரியாவும் அந்த கட்சியை விட்டு விலகினார்.

மகேந்திரன் அவர்கள் அந்த கட்சியை விட்டு விலகியதாக அறிக்கை வந்த சில மணிநேரங்களிலேயே கமலஹாசன் தரப்பிலிருந்து அறிக்கை வெளிவந்தது அதில் துரோகியை கலையெடுத்துவிட்டோம் இனி மக்கள் நீதி மய்யத்திற்கு வெற்றி தான் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது நீண்ட நாட்கள் மௌனம் காத்து வந்த மகேந்திரன் இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மக்கள் நீதி மையத்தில் முக்கிய பொறுப்பிலிருந்து விலகிய பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார்.

அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மகேந்திரன் அவர்களை வரவேற்று பேசினார் அப்போது லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் மகேந்திரன். தேர்தலுக்கு முன்பே மகேந்திரன் வந்திருந்தால், கோவையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியும் என்று பேசினார் ஸ்டாலின். ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்.

Exit mobile version