Home NEWS குடியரசு தின விழாவில் மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான Abide With Me பாடல் நீக்கம்..!!!சர்ச்சைக்கு...

குடியரசு தின விழாவில் மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான Abide With Me பாடல் நீக்கம்..!!!சர்ச்சைக்கு காரணம் இது தான்.!!!

indian republic day 2022

குடியரசு தின விழா வருகின்ற ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின விழாவில் ஆண்டு தோறும் ஒலிக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களுக்கு விருப்பமான பாடலான என்னோடு இருங்கள் பாடலை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழாவில் இந்தியாவில் உள்ள கலைஞர்கள் ஒன்றுகூடி நடனம் அணிவகுப்பு ஊர்வலம் என்று குடியரசு தின விழாவை சிறப்பாக கோலாகலமாக கொண்டாடுவார்கள் இந்திய ராணுவத்தின் பெருமையை பற்றி எடுத்துரைப்பார்கள்.

ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை பிரம்மாண்டமாக இந்தியர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். குடியரசு தின விழாவில் காந்தி அவர்களுக்கு பிடித்த பாடலான என்னோடு இருங்கள் பாடலை மத்திய அரசு நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்பவர் காசநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிரியும் நேரத்தில் 1847 ஆம் ஆண்டு என்னோடு இருங்கள் (Abide With Me ) என்ற பாடலை எழுதியதாகவும் மகாத்மா காந்தி அவர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்ததாகவும் சத்திய சோதனைகள் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தற்பொழுது அப்பேர்பட்ட பாடலை குடியரசு தின விழாவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கவிஞர் முஹம்மத் இக்பால் அவர்கள் எழுதிய சாரே ஜஹான் சே அச்சா பாடல் இசைக்க பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version