Home NEWS மதுரையில் 52 ஷவர்மா கடைகளில் திடீர் சோதனை…!!! அழுகிய 10 கிலோ...

மதுரையில் 52 ஷவர்மா கடைகளில் திடீர் சோதனை…!!! அழுகிய 10 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்…!!! அதிர்ச்சியில் மக்கள்.

madurai shawarma shop raid by food safety officers

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூர் உணவகம் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது மட்டுமல்லாமல் அதே உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். ஷவர்மா சாப்பிட்டபின் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தமிழகத்தில் ஷவர்மா உணவகங்களை சோதனையிடும் வேலை இன்று பரபரப்பாக நடந்தது. குறிப்பாக மதுரையில் 52 சவர்மா உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை 10 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அழுகிப் போன அந்த இறைச்சியை பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து உணவகங்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

மதுரையில் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி சிக்கன் ஷவர்மா செய்வது குறித்து விழிப்புணர்வு கொடுத்துள்ளார்கள் குளிரூட்டப்பட்ட ஃப்ரிட்ஜில் வைத்த சிக்கனை பயன்படுத்தக்கூடாது, பழைய சிக்கனை பயன்படுத்தக்கூடாது, செயற்கையாக நிறம் கூட்ட பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்று பல்வேறு வகையான விழிப்புணர்வு கொடுத்து உள்ளார்கள்.

இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்ற தகவலையும் உணவு துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Exit mobile version