Home NEWS மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்…!!! கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பலி, 24...

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்…!!! கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பலி, 24 பேர் காயம்.

madurai

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 13-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நேற்று 11ஆம் நாள் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

மேலும் மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை தொடங்கியது. இதனை காண தல்லாகுளம் முதல் ஆழ்வார்புரம் வரையிலும் வைகை ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் கள்ளழகரை காண காத்திருந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர். மேலும் கள்ளழகர் பச்சை பட்டுஉடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். இதனிடையே கள்ளழகரை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மொத்தம் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் எதிர்பாராதவிதமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை தொடர்புகொள்ள 94980 42434 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version