Home CINEMA NEWS இனி அஜித்தை தல என்று கூப்பிட வேண்டாம் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி.

இனி அஜித்தை தல என்று கூப்பிட வேண்டாம் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி.

thala ajith venkat prabhu

அஜித் தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர். தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அதன் பின் என்னுடைய படத்தை பார்த்து தியேட்டரில் ரசியுங்கள் என்று கூறியவர்.

மங்காத்தா திரைக்கு வருவதற்கு முன் தனது ரசிகர் மன்றத்தை முழுவதுமாக கலைத்த அஜித் இன்றுவரை எந்த ஒரு ரசிகர் மன்றம் பின்புலமும் இல்லாமல் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் தன்னுடைய பெயரை தேவையில்லாமல் அவதூறாக பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

Ajith SPB

தற்பொழுது அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களிடமிருந்து ஷாக்கான அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில் பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் அன்புடன் அஜித்குமார் என்று அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளியான பிறகு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பு ரசிகர்களும் அஜித்தை தல தல என்று செல்லமாக அழைத்து வந்தார்கள் ரசிகர்கள் திடீரென்று இப்படி ஏன் கூறியிருக்கிறார் அஜித் என்று கேள்விகள் முன்வைத்து வந்தனர்.

Ajith Venkat Prabhu Mankatha

இது பற்றி சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சி மங்காத்தா, மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களிடம் பேட்டியின் போது கேட்டபோது அஜித் தன்னை தல என்று கூப்பிட வேண்டாம் என்றால் நாம் ஏன் கூப்பிட வேண்டும் அவருக்கு என்ன பிடிக்கிறதோ அதே போல அவரை அழைப்போம் என்று பேசிய அவர் தல அஜித் என்று பேசத் தொடங்கினார் பாருங்கள் என்னை அறியாமலேயே அஜித்தை தல அஜித் என்று தான் அழைக்கிறேன் காலப்போக்கில் அஜித் அவர்கள் கூறியது போல AK அல்லது அஜித்குமார் என்று அழைத்தால் சரியாகிவிடும் மங்காத்தா படம் வெளியாகும் முன்பே ரசிகர் மன்றங்கள் வேண்டாம் உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று மன்றங்களை கலைத்தவர்.

தற்பொழுது அவர் எடுத்துள்ள முடிவு தனிப்பட்ட விஷயம் இதுவரை அவரை தல என்று அழைத்தோம் இனிமேல் அவரை அவர் கூறியபடியே அழைப்போம் என்று கூறியுள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.

முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி அஜித்திற்கு பெரிய ஹிட் படமாக அமைந்த தீனா என்ற படத்தில் தான் அஜித்தை தல என்று அழைத்தார்கள் அதனை தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் அவரை செல்லமாக அழைத்து வந்தனர். சில படங்களில் தல என்று அஜித்தை கூப்பிடும் படி வசனங்கள் கூட தொடர்ந்து அஜித்தின் படங்களில் வைத்து வந்தார். தற்பொழுது திடீர் என்று என்னை தல என்று கூப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். எது என்னமோ தல சொன்ன சரியாய் தான் இருக்கும் சாரி AK.

Exit mobile version