Home NEWS தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு பெண் கலெக்டர்கள் நியமனம்..!!! அதிரடி காட்டும்...

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு பெண் கலெக்டர்கள் நியமனம்..!!! அதிரடி காட்டும் தமிழக அரசு.

Collectors

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பெண்கள் கலெக்டர்களை அதிரடியாக நியமித்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெண் அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னை கலெக்டராக விஜயராணி, காஞ்சிபுரம் கலெக்டராக ஆர்த்தி, அரியலூர் கலெக்டராக ரமணசரஸ்வதி, தர்மபுரி கலெக்டராக திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை கலெக்டராக லலிதா, நாமக்கல் கலெக்டராக ஸ்ரேயா சிங், பெரம்பலூர் கலெக்டராக வெங்கட பிரியா, புதுக்கோட்டை கலெக்டராக கவிதா ராமு, ராமநாதபுரம் கலெக்டராக சந்திரகலா, திருவாரூர் கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன், நீலகிரி கலெக்டராக இன்னோ சென்ட் திவ்யா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஆட்சியில் இவ்வளவு அதிகமான அளவில் பெண்களை கலெக்டராக யாரும் நியமித்தது இல்லை. முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தான் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை கலெக்டர் விஜயராணி கூறும்போது, பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நாங்கள் நல்வாய்ப்பாகவே எடுத்துக் கொண்டுள்ளோம். மற்ற ஆண்களுடன் போட்டி போடுவது மட்டுமில்லாமல் அவர்களையும் நாங்கள் முந்த முடியும் என்ற நம்பிக்கையும் வேகமும் எங்களிடம் உள்ளது. ஆண், பெண் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பெரிய மாவட்டங்களில் கூட பெண்கள் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெரிய மாவட்டம் சின்ன மாவட்டம் என்ற பாகுபாடு கிடையாது.

எல்லா இடத்திலும் ஒரே வேலை தான். ஆனால் கூடுதலாக எல்லா இடங்களையும் சுற்றி வர வேண்டும். அவ்வளவுதான் கூடுதலாக வேலை இருக்கும் அதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கினால் போதுமானது. ஆண்களை போல நாங்களும் அவர்களுடன் போட்டி போட்டு தான் படித்தோம் வேலையும் வாங்கினோம். இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்கள் திறமையை நிரூபிப்போம். எங்கள் திறமைகளை பார்த்து இன்னும் கூடுதல் வாய்ப்பு கூட கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார்.

Exit mobile version