Home NEWS 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…!!!

9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…!!!

election

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் பழனி குமார் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த அறிவிப்பால் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ஊழியர்களில் தேவையை கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் மற்றும் கோவிட் தடுப்புகளை குறித்து அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தலாம். உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும். மேலும் இந்த தேர்தலில் நான்கு வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version