Home CINEMA NEWS என்னுடைய ரோல் மாடல் ரஜினி விஜய் தான் – லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன்...

என்னுடைய ரோல் மாடல் ரஜினி விஜய் தான் – லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் பேட்டி.

the legend saravana stores owner

இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவர்கள் ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா.

அஜித்தின் உல்லாசம் என்ற படத்தை எடுத்தவர் தான் அண்ணாச்சியின் லெஜெண்ட் படத்தை எடுத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் அப்போது தொடர்ந்து பேசிய அவர் பத்திரிகையாளர்கள் கேட்ட எடக்கு மடக்கான கேள்விக்கும் பதிலளித்தார்.

லெஜெண்ட் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. காமெடி ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது குறிப்பாக கதையம்சம் நன்றாக இருக்கும் என்று கூறினார். இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமாக செலவு செய்திருக்கிறோம் என்றால் வெற்றி பெற வேண்டும் என்பதினால் கூறிய அவர் என்னுடைய ரோல் மாடல் ரஜினி சார் மற்றும் விஜய் சார் தான் என்றும் கூறியுள்ளார்.

என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் நன்றாக வந்துள்ளது. விவேக் சார் அவருடைய கதாபாத்திரத்தை நன்றாக நடித்துக்கொடுத்தார் இந்த படத்திற்கு பிறகு நல்ல கதையம்சம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் முடிந்த அளவிற்கு எங்களுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறோம் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளே சென்றுள்ளார்.

Exit mobile version