Home NEWS திருவள்ளுவர் உருவத்தை நடவு நட்டு மரியாதை செய்த கும்பகோணம் விவசாயி …!!! குவியும் பாராட்டுக்கள்..!!!

திருவள்ளுவர் உருவத்தை நடவு நட்டு மரியாதை செய்த கும்பகோணம் விவசாயி …!!! குவியும் பாராட்டுக்கள்..!!!

kumbakonam farmer

கும்பகோணம் அருகே வயல் திருவிழா. திருவள்ளுவரின் உருவத்தை நடவு செய்து சாதனை படைத்த விவசாயிக்கு பாராட்டுக்கள் இணையத்தில் குறைந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் மலையப்பநல்லூரில் உலகில் முதல் முதலாக இயற்கை விவசாயம் பாரம்பரிய நெல்லுக்கு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன் வயல் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் நெல் வயலில் நடவு செய்யப்பட்டுள்ள உழவுக்கென்று திருக்குறளில் தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவத்தை இயற்கை விவசாயி இளங்கோவன் என்பவர் உலகின் முதல் முறையாக இயற்கை விவசாயத்தில் சின்னார் என்ற நெல் ரகத்தினாலும் மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும் நடவு செய்துள்ளார். திருவள்ளுவரின் உருவ அமைப்பு நீளம் 50 அறியும் அகலம் 45 அடியும் கொண்டு நடவு செய்து பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளார் அந்த விவசாயி.

இது குறித்து விவசாயி இளங்கோவன் அவர்கள் கூறுகையில் இயற்கை விவசாயத்தை கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வருகிறேன். அதுபோல இந்த வருடம் 2000 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர் அவர் இயற்றிய மொத்த குரல்களில் 11 குரல்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதியுள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில் திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடவு செய்ய கடந்த வருடம் முதல் நினைத்து வந்தேன் அதனை இந்த வருடம் நிறைவேற்றி உள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

கடந்த ஐந்து நாட்களாக நான் தனி ஆளாக நின்று நடவு செய்து உள்ளேன் எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நடவு செய்ய முயற்சி செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார் அந்த விவசாயி.

திருவள்ளுவரின் உருவப் படத்தை நடவு செய்து ஆச்சு அசல் கண்முன் நிறுத்திய விவசாயிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Exit mobile version