Home NEWS வீரமரணம் அடைந்த பழனி அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி அறிவித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.

வீரமரணம் அடைந்த பழனி அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி அறிவித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.

kjr studios

லடாக் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இந்திய – சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்திய ராணுவவீரர்கள் 17 பேர் படுகாயம் அடைந்து சிச்சையில் இருந்த போது உயிர் இழந்து உள்ளனர். இந்த தாக்குதல் துப்பாக்கி ஏதும் பயன்படுத்தவில்லை கற்கள் மற்றும் இரும்பு ராடுகளை வைத்து வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சீன ராணுவத்தினர் நடத்திய இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். அதில் ஒருவர் தமிழகத்தை சார்ந்தவர். அவரது பெயர் பழனி. பழனி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 22 ஆண்டுக்களாக ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். இன்று அவரது உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்கிறார்கள். நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பழனியின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்து நிதி தொகை 22 லட்சம் தருவதாகவும் மற்றும் பழனி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை தருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

தற்பொழுது வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி அறிவித்து உள்ளது KJR STUDIOS என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம். இந்த தயாரிப்பு நிறுவனம் தான் விஸ்வாசம் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர். அது மட்டும் அல்லாமல் பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வரும் இந்த நிறுவனம் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து வருகிறார்கள்.

Exit mobile version