Home CINEMA NEWS வில்ஸ்மித் விவகாரத்தில் குஷ்பூ கொடுத்த அதிரடி பேட்டி…!!! வில்ஸ்மித் இடத்தில் என் கணவர் இருந்திருந்தால்..?

வில்ஸ்மித் விவகாரத்தில் குஷ்பூ கொடுத்த அதிரடி பேட்டி…!!! வில்ஸ்மித் இடத்தில் என் கணவர் இருந்திருந்தால்..?

kushboo

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த ஆவணப்பட விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்ட கிரிஸ் ராக் மேடையில் அமர்ந்திருந்த பிரபலங்களை மையப்படுத்தி நகைச்சுவையாக பேசினார்.

அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் ஸ்மித் மனைவி Jada Pinkett Smith குறித்து கிரிஸ்-ன் ஜோக் ரசிக்கும்படியாக இல்லை. அதில் GI Jane என்ற ஹாலிவுட் படத்தில் பெண் ராணுவ அதிகாரியாக தோற்றத்துடன் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜடா alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் இதனை ஒப்பிட்டுப் பேசியது வில் ஸ்மித்தை கோபமடையச் செய்தது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மேடை ஏறி சென்று அவரை கன்னத்தில் அரைத்தார். இந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு கூறும்போது எந்த வன்முறையும் நான் ஆதரிக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் அந்த விவகாரத்தில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பிறவி குறைபாடுகளை பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். இதுபோன்ற இடத்தில் என் கணவர் இருந்தாலும் வில் ஸ்மித் செய்ததே தான் என் கணவரும் செய்திருப்பார் என கூறி உள்ளார்.

Exit mobile version