Home NEWS பிஞ்சு குழந்தையின் உயிரைக்காக்க திரண்ட 18 கோடி விலைமதிப்புள்ள மருந்து இரண்டே நாளில் கிடைத்ததால் பெற்றோர்...

பிஞ்சு குழந்தையின் உயிரைக்காக்க திரண்ட 18 கோடி விலைமதிப்புள்ள மருந்து இரண்டே நாளில் கிடைத்ததால் பெற்றோர் நெகிழ்ச்சி…!!! மனிதநேயம் ஜெயித்தது.

Kerala baby 18 crore

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மாட்டூல் என்ற இடத்தை சேர்ந்தவர் ரபீக். இவரது மனைவி மாரியும்மா. இவர்களுக்கு 15 வயதான அப்ரா என்ற மகளும் ஒன்றை வயதான முகமது என்ற ஆண் குழந்தையும் உள்ளது. அப்ராவுக்கு பிறக்கும்போதே முதுகு எலும்பு தசை நார் சிதைவு என்ற நோய் இருந்தது. இந்த அபூர்வ நோய் பாதித்தால் எழுந்து நடக்க முடியாது. இந்த நோயை குணப்படுத்தும் சோல்ஜென்ஸ்மா என்ற மருந்தின் விலை 18 கோடி.

ரபீக்கால் இந்த மருந்தை வாங்க முடியாததால் அவருடைய மகள் அப்ரா இப்போதும் வீட்டில்தான் முடங்கிக் கிடக்கிறார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் ரஃபிக் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. துரதிஸ்டவசமாக அந்த குழந்தைக்கும் முதுகெலும்பு தசை சிதைவு நோய் பாதித்தது. தன்னுடைய இரண்டு குழந்தைகளும் அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டதால் குடும்பம் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் அவரது மகள் அப்ரா தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்கு ரூபாய் 18 கோடி விலை உள்ள மருந்தை வாங்க அனைவரும் உதவ வேண்டும் என்று கோரி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்த வீடியோ ஒரு சில நிமிடங்களிலேயே வைரலாக பரவியது. வீடியோவில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் பணம் குவியத் தொடங்கியது. கேரளா மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துபாய், குவைத் நாடுகளில் இருந்தும் பணம் வர தொடங்கியது. இரண்டு நாட்களில் அந்த மருத்துவத்திற்கு தேவையான 18 கோடி கிடைத்தது. இதையடுத்து இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று ரபிக் தெரிவித்துள்ளார்.

Exit mobile version