Home NEWS ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஒரே ஆளாக சுத்தம் செய்து வரும் மாற்றுத்திறனாளி பிரதமர் மோடி...

ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஒரே ஆளாக சுத்தம் செய்து வரும் மாற்றுத்திறனாளி பிரதமர் மோடி பாராட்டு ..!!! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்.

kerala rajapan cleans plastic in lake

ஏரிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி செயலைப் பார்த்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கோட்டயம் மாவட்டம் மஞ்சள் நிறம் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் இவருக்கு வயது 69 இவர் 5 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்கள் செயலிழந்து உள்ளார். இரு கால்களும் பாதிக்கப்பட்ட இவர் தவழ்ந்து தவழ்ந்து எல்லா இடத்திற்கும் சென்று வருவாராம் இவர் திருமணமும் செய்து கொள்ளவில்லையாம்.

முன்பெல்லாம் கிடைத்த வேலையை செய்து கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்த ராஜப்பன் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக உடல் உபாதைகளால் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து இருக்கிறார்.

இருந்தாலும் தனது உடல் உபாதைகளை மறந்துவிட்டு ஆறு ஆண்டுகளாக கோட்டயம் மாவட்டத்தில் வேம்பநாடு ஏரியில் நீரோடைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேர்த்து அதை விற்று வாழ்ந்து வருகிறார். குட்டி படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு படகில் அமர்ந்து கொண்டு தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வருகிறார்.

பிரபல நாளிதழ் ஒன்றிற்கு இவர் கொடுத்த பேட்டியில் கேரளத்தை கடவுள் தேசம் என்பார்கள் அதற்கு காரணமே இயற்கை வளம் தான் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டிலில் தூக்கி வீசி விடுகிறார்கள் இதனால் பல இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீரில் மிதக்கிறது அதனால் என்னால் முடிந்த அளவு ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து விட்டு வருகிறேன் இது எனது வருமானத்துக்காக நான் செய்யவில்லை இயற்கை சூழலை காப்பதற்காக இது என்னுடைய ஒரு சிறிய முயற்சி என்று கூறியவர் பிரதமர் என்னைப் பற்றி பேசுவதே நான் ரேடியோவில் கேட்டறிந்தேன் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Exit mobile version