Home CINEMA NEWS சொகுசு விமானத்தில் முதல் முறையாக BOY FRIEND உடன் பயணம் செய்த கீர்த்தி சுரேஷ்…!!! செம...

சொகுசு விமானத்தில் முதல் முறையாக BOY FRIEND உடன் பயணம் செய்த கீர்த்தி சுரேஷ்…!!! செம அழகா இருக்காங்கல்ல..!!!

keerthy suresh and his pet dog nyke

தமிழ் சினிமாவில் ஹோம்லியான கதாநாயகியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் தனது மார்க்கெட்டை உயர்த்த முடிவு செய்தபின் கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

சமீபத்தில் மகேஷ்பாபு உடன் ஜோடியாக நடித்த சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் அம்மணி முகம் சுளிக்காத அளவிற்கு ஓரளவிற்கு கிளாமராக நடித்திருந்தார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி இடத்தில் இருக்கிறார்.

இதுவரை கவர்ச்சி என்றால் நோ நோ என்று சொல்லும் கீர்த்தி தற்பொழுது உள்ள போட்டியை மனதில் வைத்துக்கொண்டு கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கலாம் என்று மனம் மாறி இருக்கிறார். நல்ல கொலு கொழுவென்று இருந்த கீர்த்தி தனது உடலை ஸ்லிம்மாக்கி தினமும் உடற்பயிற்சி, யோகா என்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

கீர்த்திக்கு மிகவும் நெருங்கிய நண்பர் மற்றும் பாய்பிரண்ட் என்றால் அவருடைய செல்லப்பிராணி நைக் தான். நைக்குடன் விளையாடுவதும் அதனைக் கட்டி பிடித்து உறங்குவதும் அதனுடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கமாக வைத்திருக்கும் கீர்த்தி எங்கு சூட்டிங் நடந்தாலும் அவரது செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்கிறாராம்.

செல்லப்பிராணி நைக்கு என்று இன்ஸ்டா பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். செல்லப்பிராணி மீது அலாதி பிரியம் கொண்ட கீர்த்தி. விமானத்தில் தனது பாய் பிரண்ட் நைக் உடன் முதல் முதலாக சொகுசு விமானத்தில் பயணம் செய்து உள்ளார். நைக்குடன் முதல் விமான பயண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Exit mobile version