Home CINEMA NEWS காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் “நான் பிழை” பாடல் வெளியீடு…!!! இரண்டு குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் “நான் பிழை” பாடல் வெளியீடு…!!! இரண்டு குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா.

nayanthara

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் “நான் பிழை” என்ற பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் விக்னேஷ் சிவன்.

இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார். இவர் சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். மேலும் விக்னேஷ் சிவன் சுமார் 6 வருடங்களாக நயன்தாராவை காதலித்து வருகிறார்.

சமீபத்தில்கூட இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருவரும் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித்குமார் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இப்படத்தின் “நான் பிழை” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் பாடலை எழுதியுள்ளார். அதோடு ரவி ஜி மற்றும் சாஷா திருப்பதி இப்பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version