Home CINEMA NEWS கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் மேலும் ஒரு மாஸ் ஹீரோ யார் தெரியுமா…!!! செம சர்ப்ரைஸ் கொடுக்க...

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் மேலும் ஒரு மாஸ் ஹீரோ யார் தெரியுமா…!!! செம சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் படக்குழுவினர்..!!!

kamalhassan confirms suriya in vikram

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் கைதி மாஸ்டர் திரைப்படங்கள் ஏற்கனவே பெரிய ஹிட் படம் என்பதனால் கமலும் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலை வைத்து எடுத்திருக்கும் விக்ரம் படத்தை திரையில் காண அனைவரும் ஆவலாய் இருக்கும் இந்த நேரத்தில் விக்ரம் படத்தில் முன்னணி நடிகர் நடிப்பது பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

ஏற்கனவே விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் என்று மாபெரும் நடிகர்கள் இருக்கும் பட்டியலில் மற்றொரு மாபெரும் நடிகர் மற்றும் மாஸ் ஹீரோ சூர்யா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி கமல்ஹாசன் கூறி இருப்பது : விக்ரம் படத்தில் சூர்யா நடித்து இருப்பது உண்மை தான். சூர்யாவின் கதாபாத்திரம் தான் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கு கொண்டு செல்லும் லீடாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

பலர் விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று கூறி வந்த நிலையில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்தார் கமல்ஹாசன்.

Exit mobile version