Home CINEMA NEWS கதையின் நாயகன் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய உலகநாயகன்..!!! மக்கள் செல்வனை...

கதையின் நாயகன் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய உலகநாயகன்..!!! மக்கள் செல்வனை என்ன கூறியுள்ளார் தெரியுமா..!!!

vijay sethupathi birthday wishes

விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் பெரிய பிரபலத்தை அடைந்தவர். கூத்துப்பட்டறையில் தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து நிற்கிறார். அடுக்கடுக்கான படங்கள் நடித்து வந்தாலும் உலக நாயகன் பாணியில வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இன்றும் விஜய் சேதுபதி நடித்த பீட்சா, விக்ரம் வேதா, மாஸ்டர், சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது தற்பொழுது விஜயசேதுபதி விக்னேஸ்வரனின் காத்துவாக்குல 2 காதல், வெற்றிமாறனின் விடுதலை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலை கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி கதையின் நாயகனாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது தம்பி விஜய் சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கமல் கூறியுள்ளார்.

Exit mobile version