Home CINEMA NEWS தேர்தலில் போட்டியிட ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்..!! கமலஹாசன் பரபரப்பு பேட்டி..!!

தேர்தலில் போட்டியிட ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்..!! கமலஹாசன் பரபரப்பு பேட்டி..!!

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மற்றும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளார்.

கடந்த 7 வருடமாக நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே இவர் இரண்டு தேர்தல்களை சந்தித்து உள்ளார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் நடிகர் கமலஹாசன் சந்திக்கவுள்ளார்.

கட்சி வேட்பாளர்களை அறிவித்த கமலஹாசன் தற்பொழுது ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருக்கு போட்டியாக நான் நிற்பேன், கட்சி தொடங்க வில்லை என்றால் அவரிடம் ஆதரவு எனது கட்சிக்காக கேட்பேன் என பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாது தமிழகத்தில் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் எப்போது அரசியலுக்கு வருவார் என இவர் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் அரசியலில் வருவது குறித்து ஆலோசித்தார். இதனை அடுத்து ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இதுகுறித்து இவ்வாறு பேசியிருப்பது அரசியல் சூழலில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா அல்லது கமலுக்கு ஆதரவு அளிப்பாரா என்பது அவர் வெளியிடும் பேட்டியில் தான் உள்ளது.

Exit mobile version