Home NEWS ஆற்றில் சடலமாக மிதந்த மாணவி, தூக்கில் தொங்கிய மாணவன்…!!!கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

ஆற்றில் சடலமாக மிதந்த மாணவி, தூக்கில் தொங்கிய மாணவன்…!!!கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் கவிதா(இருவருடைய பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). கவிதா அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 20ஆம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் பெற்றோர் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் நவம்பர் 21ஆம் தேதி புகார் அளித்தனர்.

இதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இதனிடையே நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பகுதியில் உள்ள ஆற்றின் கரையோர பகுதியில் இளம் பெண் சடலமும் அதற்கு அருகில் வேப்பமரத்தில் இளைஞன் ஒருவர் சடலமாக தொங்குவதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஆற்றில் சடலமாக இந்த உடல் கவிதாவின் உடல் என தெரிய வந்தது. அதோடு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய குதிரைசந்தில் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் கணேஷ் (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

மேலும் இரண்டு சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இருவருடைய பெற்றோர்களிடமும் புகாரைப் பெற்று கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் முதல்கட்ட விசாரணையில் உயிர் இழந்த இரு மாணவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவும் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் திருமணம் நடைபெறுமா என்ற அச்சத்தில் இருவரும் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இறந்த மாணவன் சில தினங்களுக்கு முன்பு சக நண்பர் ஒருவரிடம் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து போவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மையான காரணம் வெளிவரும் என கூறியுள்ளார்.

Exit mobile version