Home CINEMA NEWS கர்ப்பமாக இருக்கும் காஜல்..!!! வாடிய முகத்துடன் காஜலின் கணவர்..!!! காஜலின் கணவருக்கு என்னாச்சு.

கர்ப்பமாக இருக்கும் காஜல்..!!! வாடிய முகத்துடன் காஜலின் கணவர்..!!! காஜலின் கணவருக்கு என்னாச்சு.

kajal agarwal husband recovring from corona

காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. தெலுங்கு சினி வட்டாரத்தில் காஜலை பற்றி கேட்டால் எந்த ஒரு படமாக இருந்தாலும் சரி எந்த ஒரு DATES பிரச்சனையும் இல்லாமல் கொடுத்த தேதியில் நடித்துக் கொடுப்பாராம் அதுபோன்று கமர்சியல் படங்களில் அம்மணி காட்டும் தாராளம் பல தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் காஜலின் கால்ஷீட்டுக்காக தவம் கிடக்க வைத்ததாம்.

ஒரு கமர்சியல் தெலுங்கு படத்தை எடுக்க விரும்பினால் தயாரிப்பாளர்கள் கதையை கேட்டுவிட்டு காஜலின் கால்ஷீட் உள்ளதா என்று தான் கேட்பார்களாம் காஜலின் கால் சீட் இல்லை என்றால் தான் மற்ற நடிகைகளை சிபாரிசு செய்வார்களாம். அந்த அளவிற்கு காஜலுக்கு தெலுங்குவில் பெத்த மார்க்கெட்.

காஜல் அகர்வால் 30 அக்டோபர் 2020 அன்று தனது தோழரும் மற்றும் குடும்ப நண்பருமான கௌதம் என்பவரை பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கொரோனா காலகட்டம் என்பதினால் காஜலின் வீட்டிலேயே சிறப்பாக நடந்து முடிந்தது.

தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. புத்தாண்டு தினத்தில் காஜல் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு இருந்தார் அவரது கணவர் கௌதம். தனது கணவர் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டால் தனது நடிப்பை விட்டு விடுவேன் என்று கூறிய காஜல் தற்பொழுது கர்ப்பமாக இருப்பதால் நடிப்புக்கு பிரேக் கொடுத்திரக்கிறார்.

சில விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வரும் காஜல் குழந்தை பெற்ற பின் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Kajal agarwal with Sister Nisha Agarwal

இந்நிலையில் காஜல் அகர்வால் அன்பு கணவர் கௌதம் அவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது ஓய்வில் இருந்த காஜலின் கணவர் தற்பொழுது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனாவிற்கு பிறகு முதல் காபி என்று பதிவிட்டுள்ளார்.

சிரித்த முகத்துடனே இருக்கும் காஜலின் கணவர் கொரோனாவிற்கு பிறகு வாடிய முகத்துடன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு காஜலின் கணவருக்கு என்று கேட்டு வருகிறார்கள்.

Exit mobile version