Home CINEMA NEWS இந்தியன் 2 படத்திற்காக படாத பாடுபடும் நடிகை காஜல் அகர்வால்…!!! இதற்கு மட்டும் இவ்ளோ நேரமா..

இந்தியன் 2 படத்திற்காக படாத பாடுபடும் நடிகை காஜல் அகர்வால்…!!! இதற்கு மட்டும் இவ்ளோ நேரமா..

இந்தியன் 2 படத்தில் 80 வயது மூதாட்டி கேரக்டரில் நடிக்கிறார் காஜல் அகர்வால். கமல்ஹாசன், காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 ஷங்கர் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் கமலஹாசனுக்கு ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் மேக்கப் போடுகிறார்கள். இதற்கு தினமும் 5 மணி நேரம் ஆகிறது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் போது இதே போல் தான் நேரம் ஆனது. இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் 90 வயது கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அவருக்கு 80 வயது மூதாட்டி கேரக்டர் என்பதால் காஜலுக்கும் ஹாலிவுட் கலைஞர்கள் மேக்கப் போடுகிறார்கள். இதற்காக அவருக்கு தினமும் மேக்கப் போடுவதற்கு மட்டும் மூன்றரை மணி நேரம் ஆகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற காஜலுக்கு இதுபோல் சிறப்பு மேக்கப் போட்டனர். அந்த புகைப்படங்களை வெளியில் கசிய விடக்கூடாது என சங்கர் உத்தரவிட்டுள்ளாராம்.

Exit mobile version