Home NEWS காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த இந்தியா வீராங்கனை ஸ்ரேயா…!!!...

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த இந்தியா வீராங்கனை ஸ்ரேயா…!!! குவியும் பாராட்டுகள்.

shreya

பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான 24 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 65 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதில் பேட்மிட்டன் இறுதிப் போட்டி வரை சென்று இந்திய வீராங்கனை ஸ்ரேயா சிங்லா ஜப்பான் வீராங்கனைய எதிர்த்து விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் நகரை சேர்ந்த ஸ்ரேயா முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால் அவர் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து ஸ்ரேயாவின் தந்தை தேவேந்தர் கூறுகையில் இந்த வெற்றி ஸ்ரேயாவின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ஆகும். நான்கு வயது இருக்கும்போது ஷ்ரேயாவிற்கு காது கேட்காதது கண்டறிந்தோம்.

அதனால் அவளால் பேசவும் முடியாது அது எங்களுக்கு தெரிய வந்தது. அதன் பின்பு காது கேட்பதற்காக உபகரணம் வாங்கி அவரது காதில் பொருத்தினோம். பின்னர் ஸ்ரேயா பேசத் தொடங்கினார். இன்று தங்கப்பதக்கம் வென்று பஞ்சாப் மற்றும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஸ்ரேயா அளித்த பேட்டியில் எனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் எனக்கு ஊக்கம் அளித்தனர்.

அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும். வரவிருக்கும் ஆசிய போட்டிகளிலும் பதக்கம் வெல்வேன். மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தன்னுடைய பலவீனத்தை பொருட்படுத்தாமல் விளையாட்டு, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Exit mobile version