Home NEWS அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!!! ஒரே வாரத்தில் 7000 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!!! ஒரே வாரத்தில் 7000 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

School

மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் 6879 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும். அதற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஆரம்ப பள்ளிகள் 119 நடுநிலை பள்ளிகள் 92 உயர்நிலைப் பள்ளிகள் 38 மேல்நிலைப் பள்ளிகள் 32 என 281 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தப் பள்ளிகளில் கடந்த 2019 -20ஆம் ஆண்டில் 1 வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புகள் வரை 18605 மாணவர்கள் புதிதாக வந்து சேர்ந்துள்ளனர். அதில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6533 பேர் வந்துள்ளனர். இதேபோல் 2020 21 ஆம் ஆண்டில் 27843 பேர் மாநகராட்சி பள்ளிகளில் வந்து சேர்ந்தனர். அதில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி 14863 பேர் சேர்ந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் கடந்த ஒன்றரை வருடங்களாக பொதுமக்கள் வருமானமின்றி கட்டணம் செலுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் நிறைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சான்றிதழை பெற்று அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதே போன்று சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் 2021 2022 ல் கல்வியாண்டில் தற்போது சேர்க்கை நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6897 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதைப் போன்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுகளில் அதிக மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.

அதனால் மாணவர்கள் சேர்க்கையும் வேகமாக நடந்து வருகிறது இதற்கு காரணம் மாநகராட்சி பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி, கம்ப்யூட்டர் வகுப்புகள், தரமான கல்வி என தனியார் பள்ளிகளின் அளவுக்கு கற்பிக்கப்படுகிறது. அதனால் மாநகராட்சி பள்ளிகளில் தரம் உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி இருக்கும் வகையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால் நிறைய பேர் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.

Exit mobile version