Home NEWS கேரளா பெண் பழனி பலாத்கார வழக்கில் பணம் பறிப்பதற்காக கணவர் மனைவி வேடம் அதிர்ச்சி தகவல்…!!!

கேரளா பெண் பழனி பலாத்கார வழக்கில் பணம் பறிப்பதற்காக கணவர் மனைவி வேடம் அதிர்ச்சி தகவல்…!!!

Palani

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 45 வயதான பெண் ஜூலை 19ஆம் தேதி கணவருடன் பழனி தனியார் லாட்ஜில் தங்கியதாகவும் அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்தார். தமிழக டிஜிபி க்கு வந்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக ஏடிஎஸ்பி சந்திரன் திண்டுக்கல், எஸ்பி ரவளிப்பிரியா பழனியில் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் இரண்டு தனிப்படையை சேர்ந்த சுமார் 15 போலீசார் நேற்று விசாரணைக்காக கேரளா மாநிலம் சென்றனர்.

அங்கு புகார் கூறிய பெண் அவருடன் வந்த நபர் அப்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் உள்ள தனிப்படை போலீசார் அப்பெண்ணின் செல்போனுடன் வந்த நபரின் செல்போன் விவரங்களை கொண்டு அதில் வந்துள்ள அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்தி வரும் முதற்கட்ட விசாரணையில் கூறும் புகாரின் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. காட்சிகள் மற்றும் நேரடி காட்சிகள் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகாரில் நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புகார் கூறிய பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கூட்டு பலாத்காரம் நடத்தப்பட்டதாக காயங்களோ அறிகுறிகளும் இல்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளனர். புகார் கூறிய பெண் கணவரை மர்ம கும்பல் கடத்தி விட்டு தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையில் புகார் கூறிய பெண்ணுடன் வந்த அவரின் சகோதரி வீடுகளில் வசிப்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

லாட்ஜில் குடிபோதையில் தகராறு செய்த இருவரையும் லாட்ஜில் உரிமையாளர் முத்து வெளியே அனுப்பி உள்ளார். மேலும் லாட்ஜ் உரிமையாளர் செல்போனுக்கு மூன்று முறை புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் கேரளா போலீஸ் பேசுவதாகவும் பணம் தர வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்காக இச்சம்பவம் அரங்கேற்றப்படுகிறது என்பது குறித்து செல்போன் எண்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Exit mobile version