Home NEWS குடும்ப தகராறில் மனைவிக்கு திருமண வரன் தேடிய கணவன்…!!! கைது செய்த காவல்துறையினர்.

குடும்ப தகராறில் மனைவிக்கு திருமண வரன் தேடிய கணவன்…!!! கைது செய்த காவல்துறையினர்.

ohmkumar

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்து கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். அவரது மகள் ஜான்சி 32 சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜான்சிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளியூரை சேர்ந்த ஓம்குமார் 34 என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதை அடுத்து சாப்ட்வேர் என்ஜினீயரான ஜான்சிக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேலை கிடைத்தது. அதனால் இருவரும் அமெரிக்கா சென்றனர்.

அங்கு தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் தன் மனைவியை பிரிந்து அமெரிக்காவில் இருந்து தனது சொந்த ஊரான வெள்ளி ஊருக்கு வந்தார். இருவரும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஓம்குமார் விவாகரத்து கோரி பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் இருவருக்கும் இதுவரை விவாகரத்து கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஓம்குமார் பிரபல திருமண தகவல் மையத்தில் மனைவி ஜான்சி மாப்பிள்ளை வேண்டும் என பதிவு செய்தார். அதில் தொடர்புக்கு மாமனார் பத்மநாபன் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனை பார்த்து பலர் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பத்மநாபன் செல்போன் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் நான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்தில் எனது மகள் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் கொடுக்கவில்லை.

தனது பெயரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் எஸ்பி வரும் குமாரிடம் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் திருவள்ளூர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் லில்லி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார். அதில் விவாகரத்து கிடைக்காத விரக்தியில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் மனைவிக்கு வரம் தேடி பதிவு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஓம்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version