Home CINEMA NEWS வசூல் சாதனை படைக்கும் வெற்றிமாறனின் விடுதலை…!!! விடுதலை படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

வசூல் சாதனை படைக்கும் வெற்றிமாறனின் விடுதலை…!!! விடுதலை படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

இவரது இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விடுதலை திரைப்படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான விடுதலை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. ரசிகர்கள் ஆவலாக திரைப்படத்தை காண வருகின்றனர். இதுவரை இப்படம் 38 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

காமெடி நடிகராக வலம் வந்த சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் வசூல் சாதனை செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Exit mobile version