Home NEWS விவசாய நிலத்தில் திடீர் என்று வந்து இறங்கிய ஹெலிகாப்டர்..!!! சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்து மக்கள்....

விவசாய நிலத்தில் திடீர் என்று வந்து இறங்கிய ஹெலிகாப்டர்..!!! சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்து மக்கள். அப்புறம் நடந்து என்ன தெரியுமா?

helicopter

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி கிராமத்தில் திடீரென ஹெலிகாப்டர் விளைநிலத்தில் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நேற்று 11:30 மணி அளவில் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் கிராமம் அருகே ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததை கிராம மக்கள் பார்த்தனர்.

திடீரென அப்பகுதியில் உள்ள பெருமாள் அம்மாள் என்பவரது வீட்டின் அருகே விளைநிலத்தில் தானியங்களை உணர்த்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த களத்தில் தரையிறங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர் தரையிறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து 4 பேர் கீழே இறங்கியதை கண்டனர். தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஹெலிகாப்டரில் இருந்து வந்தது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சேர்ந்த பாரத் அவரது மனைவி ஷீலா என்பதும் கேரள மாநிலம் கொச்சி அருகே கொட்டகுளம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக பெங்களூருவை சேர்ந்த சிப்ஸன் ஏவியேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். நேற்று காலை 10 :15 மணி அளவில் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். பைலட் கர்னல் ஐஸ்பால் இயக்கினார், பொறியாளர் ஹங்கித் சிங் உடனிருந்தார்.

பெங்களூருவில் இருந்து கேரளா சென்ற ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் வந்தபோது பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலையால் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாதுகாப்பாக தரை இறங்கியது. ஒரு மணி நேரத்தில் வானிலை சீரானதையடுத்து மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு கொச்சின் சென்றது.

ஏற்கனவே நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தது மக்களின் மனதில் இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் திடீரென கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version