Home CINEMA NEWS குக் வித் கோமாளி சிவாங்கிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை ..!!ஆறுதல் கூறும் ரசிகர்கள் ..!!

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை ..!!ஆறுதல் கூறும் ரசிகர்கள் ..!!

தமிழகத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பெரிதும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சமையலையும் சிரிப்பையும் ஒன்றாக கலந்து தருவது மக்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாகவும் அறுசுவை விருந்தாகவும் இருந்து வருகிறது.

இதில் பங்கு பெற்று வரும் அனைத்து போட்டியாளர்களை விட அதில் பங்கு பெரும் கோமாளிகள் தான் மிகவும் பேமஸ். இதில் பாடகியாக இருந்து கோமாளியாக பங்கு பெற்றவர் சிவாங்கி. இவரை அனைவருக்கும் பிடித்தது .இவரது துரு துரு பேச்சு மக்கள் மனதில் இடம் பிடித்தது. இதன் மூலமாக இவருக்கு சினிமாவிலும் பல வாய்ப்புகள் கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் முடிவடைந்த பிறகு தற்பொழுது குக் வித் கோமாளி மீண்டும் தொடங்கிவிட்டது. இந்த இந்த முறை சிவாங்கி கோமாளியாக பங்கு பெறாமல் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். வாரவாரம் தனது சமையல் திறமையையேற்றி வரும் சிவாங்கி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ஒரு போஸ்ட் செய்துள்ளார்.

இரண்டு நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் எழுந்துக்கக்கூட முடியவில்லை என்றும் அவர் ரசிகர்கள் தரும் ஆதரவால் தான் அவரால் போட்டியில் பங்குபெற முடிகிறது என கூறியுள்ளார். இந்த பதிவிற்கு அவர் ரசிகர்களும் உங்களால் முடியும் நீங்கள் வெல்வீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர் .

Exit mobile version