Home CINEMA NEWS சர்ச்சையை கிளப்பிய ஹன்சிகா படம். வீடியோவை வெளியிட போகும் மான்கராத்தே நடிகர்..!!!

சர்ச்சையை கிளப்பிய ஹன்சிகா படம். வீடியோவை வெளியிட போகும் மான்கராத்தே நடிகர்..!!!

haniska maha movie teaser july 2

ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஹன்சிகா தமிழ் திரையுலகில் ஜூனியர் குஷ்பு என்று அழைக்கப்பட்டார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஹன்சிகா சிம்புவின் வாலு படத்தில் நடித்திருந்தார்.

சிம்புவிற்கும் ஹன்சிகாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர். இரவு நேர பார்ட்டிகளில் ஒன்றாக சுற்றித்திரிந்த ஹன்சிகா சிம்பு திடீர் என்று பிரிந்தனர். காதல் தோல்வியால் அப்செட்டான சிம்பு சரியாக படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் இருந்தார். சிம்புவின் தந்தையும் தனது மகனின் நிலை பார்த்து கண்ணீர் விட்டார்.

சிம்பு திடீரென்று ஆன்மீக பயணம் என்று வாழ்க்கையே வெறுத்துப் போய் வேறொரு திசையில் செல்ல அதன்பின் மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வந்தார் தற்போது சிம்பு தனது முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் மஹா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை ஸ்டார் மியூசிக் வாங்கியது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காவி உடை அணிந்து ஹன்சிகா சுருட்டு குடிப்பது போல வெளியிட்டார்கள் இதற்கு பல தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது.பெரும் சர்ச்சைக்குள் ஆனது பர்ஸ்ட் லுக்.

தற்பொழுது நாளை ஹன்சிகா மகா படத்தின் டீசர் வெளியிட உள்ளார்கள். காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சிம்பு ஹன்சிகா நடித்த இந்தப் படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

Exit mobile version