Home CINEMA NEWS நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டதாக நடிகை ஹன்சிகா கொரோனா விதிமீறல் என புகார்!!! வெளியான அதிர்ச்சி...

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டதாக நடிகை ஹன்சிகா கொரோனா விதிமீறல் என புகார்!!! வெளியான அதிர்ச்சி தகவல்.

Hansika Motwani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மொத்வானி.மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஹன்சிகாவிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

தற்போது ஹன்சிகா மோத்வானி மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாத் மோத்வானி நடிகை முஸ்கான் நான்சி திருமணம் கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் உதய்பூர் தி ராயல் ரீட்ரீட் என்ற 7 நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இரண்டாவது அலை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணம் நடந்ததால் அனைவரும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முக கவசம் தடுப்பூசி போன்ற மருத்துவ பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணம் நடந்ததாக ஹன்சிகா தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் ஹன்சிகா தனது சமூக வலைத் தளத்தில் அண்ணனின் திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹன்சிகாவும் அவரது உறவினர்களும் நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி குதித்து கும்மாளமிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளுவதும் தண்ணீரில் குதித்து முத்தமிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. யாரும் முக கவசம் அணிய வில்லை சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை கொரோனா லாக்டவுன் விதிமுறைகளின்படி அனைத்து நீச்சல் குளமும் மூடப்பட்டு இருக்க வேண்டும். ஹோட்டல் நிர்வாகம் நீச்சல் குளத்திற்கு அவர்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹன்சிகா வெளியிட்ட இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version