Home NEWS பசிப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கும் கோவை பெண்..!!! இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்..!!! மனிதம் தோற்கவில்லை.

பசிப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கும் கோவை பெண்..!!! இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்..!!! மனிதம் தோற்கவில்லை.

kovai girl providing free food for hungers

நாம் நாள்தோறும் உழைத்து சேர்க்கும் பணம் உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் மற்றும் மருத்துவச் செலவுக்கும் தான் அதிகம் போய்க்கொண்டே இருக்கிறது.

பொதுவாக நமது முன்னோர்கள் உண்ணும் உணவை தெய்வம் என்று கருத்தக்கூடியவர்கள் சிறிதளவு சிதறிய சாதமாக இருந்தாலும் சரி அதனை வீணடிக்கக் கூடாது என்று கூறுவார்கள். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் சரியாக உண்ண வேண்டும். உணவின் அருமை தினமும் பசி எடுத்து சரியாக சாப்பிடக்கூட பணம் இல்லாதவர்களுக்கு தான் தெரியும்.

இந்நிலையில் கோயமுத்தூரில் உள்ள புளியங்குளம் பகுதியில் சாலையோரத்தில் சிறிய பிரியாணி கடையை வைத்து நடத்தும் பெண்ணொருவர் அந்த கடையில் ஒரு போர்டு வைத்துள்ளார். அதில் பசிக்கிறதா எடுத்துக்கோங்க என்று எழுதியுள்ளார்.

உணவு உண்ணும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரைஸ் வையுங்க என்று கேட்டால் முகம் சுளிப்பார்கள் அல்லது எக்ஸ்ட்ரா ரைஸ்கு கூட கட்டணம் வசூலிப்பார்கள் ஆனால் அந்தப் பெண் எந்த ஒரு பணமும் இல்லாமல் தன் கடைக்கு வரும் ஏழை எளிய மக்கள் சாப்பிடட்டும் என்ற மனசு தான் சார் கடவுள்.

இந்த கடையை புகைப்படமெடுத்து ஆர்ஜே பாலாஜி சமூகவலைத்தளத்தில் தற்போது பதிவிட்டு மனித நேயம் தோற்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version