Home NEWS சாதனை படைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு தேசிய விருது…!!!

சாதனை படைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு தேசிய விருது…!!!

Government

மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலை கொண்டு சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஐசிடி என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காலம் என்பதால் இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வு கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தங்கள் பயன்படுத்தும் கற்பித்தல் மாதிரிகள் இணையத்தில் விளக்கிக் காட்டினார். கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டம் கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகர் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தயானந்த் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு நாடுமுழுவதும் 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்ற தமிழக ஆசிரியர்களில் சிவகங்கை மாவட்டம் மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில் செல்வன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டு உருவாக்கினார்.

படத்திற்காக ஜாமென்ட்ரி, கிராப் போன்றவற்றுக்காக மென்பொருளை உருவாக்கினார். பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த தங்கராஜாமகாதேவன் இவர் அனிமேஷன் படங்களை உருவாக்கி சூழலியல் சார்ந்த வீடியோக்களை தயாரித்து கற்பிப்பவர். மேலும் அதே மாவட்டத்தை சேர்ந்த வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் இளவரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தொழில்நுட்ப உதவியுடன் 22 நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து தங்கள் பள்ளி மாணவர்களை உரையாட வைத்தவர். அரசு அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே கியூஆர் கோடு திட்டத்தை செயல்படுத்திக் காட்டியவர்.

Exit mobile version