Home NEWS Google Meet திருமணம், Zomato வழியாக திருமண விருந்து, காதல் ஜோடியின் ஆன்லைன் திருமணம்…!!!

Google Meet திருமணம், Zomato வழியாக திருமண விருந்து, காதல் ஜோடியின் ஆன்லைன் திருமணம்…!!!

wedding

மேற்கு வங்கத்தில் ஒரு காதல் ஜோடி திருமணத்தை ஆன்லைன் மூலம் நடத்தவுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சாண்டிபென் சர்க்கார், அதிதி தாஸ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணத்தினால் திருமணம் தள்ளிப்போனது.

இந்தத் திருமணம் தான் உலக அளவில் இன்றைய ட்ரென்டிங் ஆக உள்ளது. தற்போது கொரோனா மூன்றாவது அலை காரணத்தினால் விருந்தினர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அழைக்கப்பட்டு திருமணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் காரணத்தினால் திருமணத்தை வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்தனர். மேலும் வரும் 24ஆம் தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக 100 பேரை மட்டுமே திருமணத்தில் நேரில் பங்கேற்க அழைத்துள்ளனர். அதோடு தங்களது உறவினர் மற்றும் நண்பர்கள் 350 பேரை “கூகுள் மீட்” மூலம் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 350 பேரும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அதனால் இவர்கள் அனைவருக்கும் “ZOMATO” மூலம் உணவு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து மணமகன் சர்க்கார் கூறுகையில், எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கடந்த 10ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தேன். இதனால் வெளியூரில் இருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் திருமணம் நடத்த முடிவு செய்தோம். முதலில் இந்த முடிவை கேட்ட அனைவரும் சிரித்தனர்.

பிறகு பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதோடு அனைவர் முன்னிலையிலும் திருமணம் நடக்கவிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் திருமணத்திற்கான அழைப்பிதழ் திருமணத்திற்கு மொய் செய்ய விரும்புபவர்கள் “GOOGLE PAY” மூலம் செலுத்தி விடலாம். அதோடு பரிசுப் பொருட்களை அனுப்ப விரும்பும் விருந்தினர்கள் “FLIPKART” மூலம் ஆர்டர் செய்து அனுப்பி வைக்கலாம் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version