Home NEWS இனி ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்று கொள்ளலாம் அரசு அறிவிப்பு.

இனி ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்று கொள்ளலாம் அரசு அறிவிப்பு.

free mask distribution in tamilnadu
free mask distribution in tamilnadu

கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்குநாள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டு வந்தாலும் குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படுமாம் இதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் தேதி வரை கொடுக்கப்படுமாம். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்த இலவச மாஸ்க்கை பெற்றுக்கொள்ளலாம் இன்று அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து பேசிய உணவு துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கூறியது “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது தமிழகத்தில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருந்தாலும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதே நல்லது” என்று கூறிய அவர் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களை வாங்குவதற்கு ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் கொடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 5 முதல் இலவச பொருட்களை வாங்கலாம். இலவச பொருட்களுடன் முகக் கவசங்கள் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Exit mobile version