Home NEWS FORD நிறுவனம் தயாரித்த கடைசி கார் இதுதான்..!!! மலர் அலங்காரம் செய்து கண்கலங்கி விடைகொடுத்த...

FORD நிறுவனம் தயாரித்த கடைசி கார் இதுதான்..!!! மலர் அலங்காரம் செய்து கண்கலங்கி விடைகொடுத்த ஊழியர்கள்..!!! நெகிழ்ச்சி சம்பவம்.

ford exits chennai unit

சென்னை செங்கல்பட்டில் மறைமலை நகரில் அமைந்துள்ள FORD தொழிற்சாலை கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தது தற்பொழுது அந்த தொழிற்சாலையை மூடுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது அதன்படி நேற்று ஃபோர்டு நிறுவனத்தின் கடைசி கார் ஒன்று உற்பத்தி செய்யப்பட்டு காரை அலங்கரித்து கண்ணீர் மல்க தொழிற்சாலைக்கு விடை கொடுத்தனர் ஊழியர்கள்.

20 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பார்த்த பல ஊழியர்களுக்கு அந்த இடத்தை விட்டு போகவே மனமில்லாமல் சென்றிருக்கிறார்கள் இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த நிறுவனம் 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் உள்ளதால் ஜூன் மாதமே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக 14,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான FORD சுமார் 20 ஆண்டுகளாக இந்தியாவில் வாகனத்தை தயாரித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் லட்சக்கணக்கான கார்களை உற்பத்தி செய்த அந்த நிறுவனம் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக தங்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய கோரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் உற்பத்தியை தொடங்கி உள்ள நிலையில் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஒரு தொழிற்சாலை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஊழியர்களுக்கு ஏற்படுத்தியது. சென்னை மறைமலை நகரில் கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வந்த தொழிற்சாலையில் கடைசி மாடலான இயக்கும் FORD ECO SPORTS காரை நேற்று உற்பத்தி செய்து அதற்கு ஊழியர்கள் மலரால் அலங்காரம் செய்து கண்ணீருடன் விடை பெற்றனர்.

சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.
 
சரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதா பிரிவு பற்றி மனம் திறந்த கணவர் தினேஷ்…!!! விவாகரத்து பற்றி அவரது கணவர் கூறியது என்ன தெரியுமா ..!!!
Exit mobile version