Home NEWS 6 மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம்.

6 மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம்.

flight passengers corona test must

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மோசமாக இருப்பதால் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு கொத்துக்கொத்தாய் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் பொருத்திக்கொண்டு கொரோனா நோயாளிகள் படும் கஷ்டம் பெரும் வேதனையாக உள்ளது.

இந்நேரத்தில் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது அதில் சென்னையிலிருந்து விமானம் மூலம் 6 மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகள் கட்டாயம் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும். அதுபோல தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு செல்வோரும் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்தே ஆகவேண்டும்.

குறிப்பாக சென்னையில் இருந்து இந்த 6மாநிலங்களுக்கு செல்வோர் கட்டாயம் கொரோனா சான்று இல்லாமல் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சென்னையிலிருந்து அந்தமான், புவனேஸ்வர், ஜெய்ப்பூர், இம்பால் பேக்டோக்ரா, ராஜ்கோட் ஆகிய 6 இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் விமான பயணிகள் கட்டாயம் கொரோனா டெஸ்ட் செய்து கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றபின் தான் விமானத்தில் செல்ல முடியும்.

சான்றிதழ் இல்லாதவர்கள் விமானத்தில் பயணிக்க முடியாது அவர்கள் பயணம் ரத்து செய்து திரும்ப அனுப்பப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது அரசு.

Exit mobile version