Home CINEMA NEWS பிரபல முன்னணி நடிகர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள காயத்திரி ரகுராம்!!!அதிர்ச்சி தகவல் உள்ளே.

பிரபல முன்னணி நடிகர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள காயத்திரி ரகுராம்!!!அதிர்ச்சி தகவல் உள்ளே.

Gayathiri Raghuram

சென்னையில் உள்ள தனியார் பள்ளி பிஎஸ்பிபி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் என்பவரை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல்வேறு பாலியல் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். இதனை கண்டித்து திரைத்துறையினர், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் பிஎஸ்பிபி பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் கண்டித்தும், பள்ளி இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்காததால் பள்ளியை மூட வேண்டுமெனவும்,பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மற்றும் பெற்றோர்களிடம் ஒருமுறை கூட மன்னிப்பு கேட்கப்படவில்லை. இந்த விஷயத்தை ஜாதி பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது அத்துடன் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும் என ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் காயத்ரி ரகுராம் சினிமாத்துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலை முதலில் கண்டியுங்கள். புதிதாக வாய்ப்பு தேடி வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது. முன்னணி நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை கவனியுங்கள். அதேபோல் நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து நிறைய பெண்கள் பாதிப்படைய செய்துள்ளீர்கள். உங்களை பார்த்தாலே முன்னணி நடிகைகள் ஓட்டம் பிடிக்காரர்கள். இதனைக் குறித்து காயத்ரி ரகுராம் மிகவும் காட்டமான ட்விட் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Exit mobile version