Home NEWS முடிச்சூர் கிராமத்தில் தேசிய கோடியை ஏற்றி வைத்த பெண் தூய்மை பணியாளர்…!!! நெகிழ்ச்சி சம்பவம்.

முடிச்சூர் கிராமத்தில் தேசிய கோடியை ஏற்றி வைத்த பெண் தூய்மை பணியாளர்…!!! நெகிழ்ச்சி சம்பவம்.

flag

தாம்பரம் அருகே முடிச்சூர் கிராமத்தில் குடியரசு தின விழாவில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய முன்கள பணியாளரை தேசியக்கொடி ஏற்ற வைத்து கிராம மக்கள் கௌரவப்படுத்தி உள்ளனர். நாடுமுழுவதும் 73 வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

மேலும் அரசியல் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். அதோடு பல்வேறு மாவட்டங்களில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றினர். இதற்கிடையே தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சியில் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் முருகம்மாளை கௌரவிக்கும் விதமாக குடியரசு தினவிழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர் சார்பில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற செய்தனர்.

இவ்விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. தூய்மை பணியாளர் தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனால் ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களுக்கு கௌரவத்தை அளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

முடிச்சூர் ஊராட்சி முன்னாள் தலைவர் தாமோதரன் கூறுகையில், தூய்மை பணியாளர்களால் மட்டுமே வீடு மற்றும் நாடு தூய்மையாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் இவர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. எனவே தூய்மை பணியாளர்களை பாராட்ட வேண்டும் என நினைத்தோம். ஆகையால் இந்த வகையில் முருகம்மாளை வைத்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Exit mobile version