Home NEWS 10 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் மனம் நொந்து போன விவசாயி ரயில் முன் பாய்ந்து...

10 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் மனம் நொந்து போன விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

nagapatinnam farmer suicide

நாகையில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விரக்தியடைந்த நிலையில் விவசாயி ஒருவர் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை சட்டையப்பர் மேல வீதியை சேர்ந்த ரமேஷ் பாபு இவருக்கு வயது 58 இவருக்கு கீழையூர் ஒன்றியம் திருக்குவளை அடுத்த மோகனாம்பாள்புரம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் உள்ளது மேலும் அங்கு மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

பத்து ஏக்கர் நிலத்திலும் சம்பா தாளடி பயிர்களை சாகுபடி செய்திருந்த ரமேஷ்பாபு இதற்கு வடக்கு பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் வலிவலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் விவசாய கடன் வாங்கியிருந்தார்.

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தது இதனை பார்த்த ரமேஷ் பாபு கடந்த சில நாட்களாக மனம் நொந்து போய் கவலையிலிருந்து இருக்கிறார். மழையால் பயிர்கள் மொத்தமும் போச்சு என்று மனமுடைந்த அவர் எர்ணாகுளத்தில் இருந்து நாகை வழியாக காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த விவசாயி ரமேஷ் பாபுவுக்கு அமுதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் மனம் நொந்துபோன விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version