Home CINEMA NEWS ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் வயற்றில் கும்மாங்குத்து குத்திய பிரபல இளம் நடிகை…!!! ஷாக்கில் ரசிகர்கள்.

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் வயற்றில் கும்மாங்குத்து குத்திய பிரபல இளம் நடிகை…!!! ஷாக்கில் ரசிகர்கள்.

arjun sarja

நடிகர் அர்ஜுன் இளம் நடிகையிடம் கும்மாங்குத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவை தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வைத்த பெயர்தான் ஆக்ஷன் கிங்.

இவருடைய படங்களில் உள்ள சண்டைக் காட்சிகளில் ரசிக்கும்படி இருக்கும் அதுபோல அர்ஜுனும் ரிஸ்க் எடுத்து நிறைய சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் நடிப்பு, இயக்குனர், தயாரிப்பாளர், கதை எழுதுதல், பாடகர் மற்றும் படம் டிஸ்ட்ரிபியூட்டர் என பல்வேறு துறைகளில் தனது தனித்துவத்தை நிலை நிறுத்தியுள்ளார்.

நடிகர் அர்ஜுன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். இந்த சாகச நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் நடிகர் அர்ஜுனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் அர்ஜுன் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வெளியான “மரக்காயர்” படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிகர் அர்ஜுன் 2 தமிழ் படங்கள் மற்றும் ஒரு மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இளம் நடிகை அர்ஜுன் வயிற்றில் குத்திய வீடியோ வைரலாகி வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் அர்ஜுன் வயிற்றில் நிக்கி கல்ராணி குத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன் சிக்ஸ் பேக்கில் நிக்கிகல்ராணி குத்துவதை ரசித்தபடி இருக்கிறார். பின்னர் நிக்கி கல்ராணி குத்தியதை வலிப்பது போல் ஆக்சன் செய்ய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version