Home CINEMA NEWS நடிகர் தனுஷுடன் முதல் முறையாக ஜோடி சேரும் பிரபல தெலுங்கு பட நாயகி…!!! யாருனு தெரியுமா.?

நடிகர் தனுஷுடன் முதல் முறையாக ஜோடி சேரும் பிரபல தெலுங்கு பட நாயகி…!!! யாருனு தெரியுமா.?

dhanush

நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்ன என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் தி வாரியர் என்ற படத்தில் நடிகர் ராமிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் “புல்லட்” பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாக ஹிட் அடித்து வருகிறது.பலரும் இப்பாடலுக்கு ரீலிஸ் செய்து வருகின்றனர். மேலும் தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல்முறையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version